என் விட்டு தீபாவளி ஒரு வாரத்திற்க்கு முன்பே ஆரம்பமாகிவிடும்… பள்ளி வாசலில் வாழ்த்து அட்டை வாங்க சிருக சிருக சேர்த்து வைத்த பணம், வாழ்த்து அட்டை வாங்கி அதை அம்மாக்கு தெரியாமல் புத்தகத்தில் மறைத்த நாட்கள் 🤩🤩.. தங்க சீட்டில் வரும் பட்டாசுக்காக வாசலில் காத்திருந்த அந்த அழகான நாட்கள் ஒரு வாழ்வியல் கவிதை… பட்டாசை சரிபாக மக பாகமக அம்மா பிரித்து கொட்டுக்க,, தங்கைளிடம் ஏமாற்றி பட்டாசை சேர்த்த குரும்பு தனம்… அதை வெயில்லில் காய வைத்த குழந்தை தனம் 😃😃 அதுவும் வேலூர் வெயில் ஊர்,, என்ன ஒரு குழந்தை குணம் ☺️☺️☺️
அதி காலை 3 மணிக்கு எழுந்து அம்மா உடன் கறி வாங்க சென்ற காலம் என்றும் பசுமை நினைவுகள், வாங்கி திரும்பும் போது, எனக்கு கறி வேண்டாம் அம்மா, சாம்பார் முருங்கை கிரை கேட்ட தருணம் ☺️ ஆனாலும் அப்பா வற்ப்புத்தி கறி சாப்பட சொல்லும் போது (எம்டன் மகன் படம் தான் என் நிலமை) 😳😳
சுடான நல்லஎனெய் அரிசி பூண்டு சேர்த்து அம்மா என்ணெய் தேய்க்கும் போது சிதறும் அரிசையை தேடி சாப்பிட்ட போது கிடைத்த ஆனந்தம் அலாதி… எணெய்யுடன் வாசலில் நான் வெடித்த வேடியில் அக்கம் பக்கத்தார் காலையில் சத்தம் போட்ட நினைவு அழகு….
என் மாமா விட்டுக்கு வந்து அவர் அக்காவுடம் பேசும் போது,, இப்போது ஏங்குகிறது, எனக்கு அக்கா இல்லை என்று!!! தாய் மாமன் எனக்கு என்றும் பிரியா உறவு தான், அவர் வீட்டுக்கு வரும் போதும், எப்போதும் அவர் மோட்டார் சைகள் (Hero Honda) சாவியை மறந்து விடுவதும்,, அக்கா தம்மி பேசும் நேரத்தில், மோட்டார் சைக்களை அடுத்து ஊர் சுற்றின நேரம் எவ்வளவு மகிச்சி😀😀😀 அதுவும் கிழே விழுந்த நினைவு😂, இன்று எனக்கு புரியும் இந்த தெளிவு அன்று இல்லை, ஆமா அவர் சாவியை மறந்தது எனக்காக என்று ♥️♥️
அம்மம்மா, தொத்தா விடம் கேட்க்காமல் கிடைக்கும் பாட்டாசு, கார்த்திகை தீப திருவிழாக்கு சேமித்து வைத்ததது 😃😃
மாலையில் அம்மாவிடம் கெஞ்சி நண்பர்கள் பார்க்க செல்லும் தீபாவளி இனி திரும்ப கிடைக்காத நினைவுகள்😄😄 என் சைக்களில் நண்பன் விட்டுக்கு செல்வது மட்டும் தான், என் வேலை (நான் அப்பவே சைக்களுக்கு Driver போட்ட ஆள்தனே) நன்பனுடன் சென்று , எனக்கு வந்த முதல் காதல் பெண்ணின் தெருவில் சுற்றிய காலம்😍😍😍 அதுவும் சினிமாவில் வருவது போல, அவளும் வசாலில் இருப்பா😇😇அந்த நினைவு பட்டாம்பூச்சி பறக்கும் பருவம் அது.. நண்பன் உடனே சொல்லுவன் “அடேய் நீ கடசி வரைக்கும் பாக்க தான் போற, போய் பேசுனு செல்லுவான்” உண்மை தான்!! என் கனவு, வாழ்க்கைல அதைவாது செய்யனும் பிறகு தான் எல்லாம்,, இத தெளிவு அம்மா கிட்ட எனக்கு கிடைத்த வாழ்கை பாடம் அல்லவா அது🤗🤗
நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படங்கள் என்றும் மறக்க முடியாத மறிக்கவும் முடியாத ஆணிவேர் நினைவு
இவை அனைத்தும் இன்று அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் போது என் நினைவில் வந்து செல்கிறது😊😊😊 இதை அனைத்தும் என் பிள்ளைகள் பார்க்க மற்றும் அனுபவிக்க வில்லை என்பதை நினைத்தால், கண்களில் கண்ணீர் மட்டும் கேட்காமல் எட்டி பார்த்தது😌😌 தீபாவளி என் வாழ்வின் பல வாழ்க்கை பாடங்கள் எனக்கு தந்தது…இன்று என் பிள்ளைகளிடம் சொல்லும் போது…புதிதாக பிறந்த உணர்வு….
தீமையை எதிர்த்துப் போராடவும், நல்வழியைப் பின்பற்றவும் தீபாவளிப் பண்டிகை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த தெய்வீக சந்தர்ப்பம் உங்கள் வாழ்க்கையை அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழுமையுடன் ஒளிரச் செய்யட்டும்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment