Saturday, November 11, 2023

நான் வாழ்ந்த தீபாவளி வாழ்வியல்

 என் விட்டு தீபாவளி ஒரு வாரத்திற்க்கு முன்பே ஆரம்பமாகிவிடும்… பள்ளி வாசலில் வாழ்த்து அட்டை வாங்க சிருக சிருக சேர்த்து வைத்த பணம், வாழ்த்து அட்டை வாங்கி அதை அம்மாக்கு தெரியாமல் புத்தகத்தில் மறைத்த நாட்கள் 🤩🤩.. தங்க சீட்டில் வரும் பட்டாசுக்காக வாசலில் காத்திருந்த அந்த அழகான நாட்கள் ஒரு வாழ்வியல் கவிதை… பட்டாசை  சரிபாக மக பாகமக அம்மா பிரித்து கொட்டுக்க,, தங்கைளிடம் ஏமாற்றி பட்டாசை சேர்த்த குரும்பு தனம்… அதை வெயில்லில் காய வைத்த குழந்தை தனம் 😃😃 அதுவும் வேலூர் வெயில் ஊர்,, என்ன ஒரு குழந்தை குணம் ☺️☺️☺️

அதி காலை 3 மணிக்கு எழுந்து அம்மா உடன் கறி வாங்க சென்ற காலம் என்றும் பசுமை நினைவுகள், வாங்கி திரும்பும் போது, எனக்கு கறி வேண்டாம் அம்மா, சாம்பார் முருங்கை கிரை கேட்ட தருணம் ☺️ ஆனாலும் அப்பா வற்ப்புத்தி கறி சாப்பட சொல்லும் போது (எம்டன் மகன் படம் தான் என் நிலமை) 😳😳

சுடான நல்லஎனெய்  அரிசி பூண்டு  சேர்த்து அம்மா என்ணெய் தேய்க்கும்  போது சிதறும் அரிசையை தேடி  சாப்பிட்ட போது கிடைத்த ஆனந்தம் அலாதி… எணெய்யுடன் வாசலில் நான் வெடித்த வேடியில் அக்கம் பக்கத்தார் காலையில் சத்தம் போட்ட நினைவு அழகு….

என் மாமா விட்டுக்கு வந்து அவர் அக்காவுடம் பேசும் போது,, இப்போது ஏங்குகிறது, எனக்கு அக்கா இல்லை என்று!!! தாய் மாமன் எனக்கு என்றும் பிரியா உறவு தான், அவர் வீட்டுக்கு வரும் போதும், எப்போதும் அவர் மோட்டார் சைகள்  (Hero Honda) சாவியை மறந்து விடுவதும்,, அக்கா தம்மி பேசும் நேரத்தில், மோட்டார் சைக்களை அடுத்து ஊர் சுற்றின நேரம் எவ்வளவு மகிச்சி😀😀😀 அதுவும் கிழே விழுந்த நினைவு😂, இன்று  எனக்கு புரியும் இந்த தெளிவு அன்று இல்லை, ஆமா அவர் சாவியை மறந்தது எனக்காக என்று ♥️♥️

அம்மம்மா, தொத்தா விடம்  கேட்க்காமல் கிடைக்கும்  பாட்டாசு, கார்த்திகை தீப திருவிழாக்கு சேமித்து வைத்ததது 😃😃

மாலையில் அம்மாவிடம் கெஞ்சி நண்பர்கள் பார்க்க செல்லும் தீபாவளி இனி திரும்ப கிடைக்காத நினைவுகள்😄😄 என் சைக்களில் நண்பன் விட்டுக்கு செல்வது மட்டும் தான், என் வேலை (நான் அப்பவே சைக்களுக்கு Driver போட்ட ஆள்தனே) நன்பனுடன் சென்று , எனக்கு வந்த முதல் காதல் பெண்ணின் தெருவில் சுற்றிய காலம்😍😍😍 அதுவும் சினிமாவில் வருவது போல, அவளும் வசாலில் இருப்பா😇😇அந்த நினைவு  பட்டாம்பூச்சி பறக்கும் பருவம் அது.. நண்பன் உடனே சொல்லுவன் “அடேய் நீ கடசி வரைக்கும் பாக்க தான் போற, போய் பேசுனு செல்லுவான்”  உண்மை தான்!! என் கனவு, வாழ்க்கைல  அதைவாது செய்யனும் பிறகு தான் எல்லாம்,, இத தெளிவு அம்மா கிட்ட எனக்கு கிடைத்த வாழ்கை பாடம் அல்லவா அது🤗🤗

நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படங்கள் என்றும் மறக்க முடியாத மறிக்கவும் முடியாத ஆணிவேர் நினைவு

இவை அனைத்தும் இன்று அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம் போது என் நினைவில் வந்து செல்கிறது😊😊😊 இதை அனைத்தும் என் பிள்ளைகள் பார்க்க மற்றும் அனுபவிக்க வில்லை என்பதை நினைத்தால், கண்களில் கண்ணீர் மட்டும் கேட்காமல் எட்டி பார்த்தது😌😌 தீபாவளி என் வாழ்வின் பல வாழ்க்கை பாடங்கள் எனக்கு தந்தது…இன்று என் பிள்ளைகளிடம் சொல்லும் போது…புதிதாக பிறந்த உணர்வு…. 

தீமையை எதிர்த்துப் போராடவும்நல்வழியைப் பின்பற்றவும் தீபாவளிப் பண்டிகை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த தெய்வீக சந்தர்ப்பம் உங்கள் வாழ்க்கையை அமைதிமகிழ்ச்சி மற்றும் செழுமையுடன் ஒளிரச் செய்யட்டும்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!


Friday, August 24, 2018

என்றும் உன் நின்னவில் அம்மா

அம்மா...





என் அம்மாவின் கடைசி பூகைப்படம் 
நான் பிறந்து
விழுந்த போது... உன் சேலைதான் ஈரமானது...!!! நான் உறங்க... உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!!
நான் பால்
அருந்தும் போது... உதட்டினை துடைத்து
உன் சேலை தான்...!!! எனக்கு பால்
கொடுக்கும்போது... உன் சேலை தான்
எனக்கு திரையானது...!!! நான் மழையில்
நனையாமல் இருக்க... உன் சேலை
தான் குடையானது...!!! நீச்சல் பழக... என் இடுப்பில் கட்டியதும்
உன் சேலை தான்...!!!! மழையில் நனைந்த
என் தலையை... துவட்டியதும்
உன் சேலை தான்...!!! மாம் பழம் தின்று
என் கை துடைத்தும்
உன் சேலை தானம்மா...!!! ஆசிரியரின்
மிரட்டலுக்கு... ஓடி ஒளிந்ததும்
உன் சேலைதான்...!!! அப்பா அடிக்க
வரும் போது... என்னை ஒலித்து
வைத்ததும்... உன் சேலை
தானம்மா...!!! தங்கைக்கு தெரியாமல்
மறைத்து வைத்து... மிட்டாய் கொடுத்தும்
உன் சேலை தான்...!!! காசு எடுத்தால் என்னை
கட்டி வைத்து அடித்ததும்... உன் சேலை தான்...!!! தலை வழிக்கு ஒத்தடம்
கொடுத்தும்... உன் சேலை
தான் அம்மா...!!! அம்மா உன் சேலையை
தொட்டு பார்கிறேன்...!! தொலைந்த இன்பத்தை
உன் கண்ணில் பார்கிறேன்...!!! மறு பிறவியிலும்
நீயே வேண்டுமென்று... இறைவனிடம் கேட்கிறேன்
அம்மாவாக..... அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!! அம்மா... எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!! பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே
ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

என் தாய் 
நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!! செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு " போய்வாடா என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?.. என நான் சொன்னேன்..!! இன்றோ.. இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!! நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உணவு
நான் அறிந்த அமுதத்தின் அசல்தான். இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!! கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா
சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல
பத்து நிமிஷமா..!, நான் வெளியல
சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி
கிளம்பிய தருணங்கள்..!! இன்றோ.. இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு
சாப்பிடும் போதே கண்கள் கலங்க
இன்று காரம் கொஞ்சம் அதிகம்
போய்விட்டது என கடைக்காரர்
சொல்ல..!! எனக்கு மட்டும் தெரிந்த
உண்மை..!! பாசமுடன் நீ அளித்த உந்தன்
ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது
ஏங்குகிறேன் அம்மா..!! அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்
வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்
தடவி விடும் எண்ணெய் துளிகள்
வேண்டா வெறுப்பாய் நிற்கும்
நான்..!! இன்றும்
என் தலை முடி சகாராதான் அம்மா
உந்தன் கை ஒற்றை எண்ணெய்
துளிக்காக ஏங்கி நிற்கிறது..!! ஆசையால்.. மழையில் நனைந்து வர
முனுமுனுத்தபடி துடைப்பாய்
உந்தன் முந்தானையில்
இப்போது நனைகிறேன்
ஆசையால் அல்ல, ஏக்கத்தால்.., அத்தி பூக்கும் தருணமாய்..! என்றாவது ஒருநாள் என்னை
திட்டும் நீ..! அந்த நொடியில்
எதிர்த்து பேசினேனே அம்மா..!! இன்றோ.. இங்கே உயர் அதிகாரி திட்ட
சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே
அம்மா..!!
என் அம்மா இளம் வயதில் 

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!! தொலைபேசியில்... உனக்காக, தேடி திரிந்து பார்த்து, பார்த்து வாங்கிய புடைவையை பற்றி
சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்
வருமே..! கண்ணு உனக்காக
ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது
எடுத்துகிட்டு போடா என்று..!! எப்படி அம்மா சொல்வேன் எந்தன்
அன்பையும் , எண்ணத்தையும்
என் ஏக்கங்களை சொல்ல துடிக்க... கைபேசியை எடுத்து , அம்மா....என்று
சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது
எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு
நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா
இருக்க..!!! என் அன்னை ஆயிற்றே... எந்தன் ஒற்றை வார்த்தையில்
புரிந்து கொள்வாய் எந்தன்
மனதை..!! நான் சொல்ல மறந்த வார்த்தைகளை
பக்குவமாய் பட்டியளிடுவாய்..,
"
வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "
"
மறக்காம எண்ண தேச்சி குளிடா"
"
ரோட்ல பத்திரமா பாத்து போடா"
"
உடம்ப பாத்துக்கோடா தங்கம் " என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்
என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே
அம்மா..!!
என்றும் உன் நின்னவில் அம்மா 


உன்னை என்னிடம் இருந்து பிரித்த
இந்த வாழ்க்கையை திட்டுவதா..? இல்லை.. உந்தன் மேல் நான் வைத்திருக்கும்
பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.? தெரியவில்லையே அம்மா..!! உனக்காக உயிரற்ற பொருட்களால்
அன்பு சின்னம் அமைத்து என்ன
பயன்..!! உதிரம் என்னும் பசை தடவி
எலும்பு என்னும் கற்கள் அடுக்க
உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்

என் அம்மாவின் செல்ல கொஞ்சிலில் சில  " என் பட்டு! என் செல்லம்! என்  அப்பு குட்டி! என்  கண்ணு ! என் சொத்து 



அம்மா என்றும் உந்தன் காலடியில்
யுவராஜ் உமாதேவி